எழுத்துரு அளவு Larger Font Smaller Font

யுத்த காண்டம்

பன்னிரண்டாம் அத்தியாயம்

(சருக்கங்கள் 59 முதல் 63 முடிய)

அவன் வால்மீகி உரைக்கு மாறாக இராமன் சரக்கூடுகட்டிக் கும்பகர்ணனைச் சுக்கிரீவனோடு ஓடாமல் தடுத்தான் என்று பொய் புகல்கிறார். இத்து டன் அவர் நிற்கவில்லை. கும்பகர்ணன் இராம னோடு போர்புரியும்போது, இராமனை வணங்கிப் புகழ்ந்து தன்னுடைய தலையை வெட்டிக் கடலில் போடும்படிக்கும், தன்னுடைய தம்பியாகிய வீட ணனை இராவணன் கொல்லாமல் பாதுகாக்கும் படிக்கும் வேண்டிக் கொண்டானென அவர் கூறு கிறார்.

உயிர் போகுமளவும் கடும் சினம் கொண்டு இராமனை இகழ்ந்து போரிட்ட கும்பகர்ணனையே இவ்வாறு துரோகிபோலவே அவர் காட்டுகிறார். இதனால் கம்பருடைய துரோகச் சிந்தை வெளிப்படு கின்றதல்லவா? உண்மையற்ற பொய்யுரை மலிந்த கம்பருடைய கவிகள் சிலரால் பாராட்டப் பெற்றா லும், அவை அழகுமிக்க ஓர் உடல் உயிரற்ற பிண மாய்க் கிடப்பதையே ஒப்பன.

“கும்பகர்ணன் இறந்த செய்தியைச் சொல்வதற்கு வீரர் பலர் ஓடி வந்து, அரியணைமிசை அமர்ந்தி ருந்த இராவணனைக் கண்டு நிகழ்ந்ததைத் தெரி வித்தார். உடனே அவன் அணைமிதிருந்து கீழே விழுந்து புலம்பினான் என வால்மீகி கூறுகிறதைப் பார்த்தோம். இதுபற்றிக் கம்பர் யாது கூறுகிறார் என ஆராய்வோம்.

கம்பர் இக்கதையையே மாற்றி விடுகிறார். கும்பகர்ணனைப் போருக்கு அனுப்பிவிட்டு இராவ ணன் மோதரன் என்ற அரக்கனை அழைத்துச் சீதையை அடைய வழி கூறு என வினவினதாகவும், மோதரன் மருத்தன் என்பவனைச் சனகனைப்போல உருக்கொளச் செய்து, அவள் முன் கொண்டு வந்து நிறுத்தினால், அவன் இராவணனைக் கூடுவாள் எனக் கூறியதாகவும், இராவணன் அவ்வாறே செய்ய அவனை ஏவிச் சீதைமுன் சென்று பலவாறு வேண்டி அவளுடைய காலில் விழுந்து கும்பிட்ட தாகவும், சீதை மறுத்துரைத்ததாகவும், உடனே மாயா சனகனைக் காட்டச் சீதை அழுதாள் எனவும், மாயா சனகன் அவளை நோக்கி இராவணனைக் கூடும்படி வற்புறுத்திக் கூறியதாகவும், அதுகேட்ட சீதை அவனை இகழ்ந்து இராவணனையும் கண்டித் துரைத்தாளெனவும் அச்சமயமே கும்பகர்ணன் இறந்த சேதியைத் தூதர் அவனிடம் புகன்றனரென வும் கம்பர் கூறுகிறார்.

இக்கதையை விரித்துக் கம்பர் தொண்ணுற் றைந்து பாடல்கள் உள்ள மாயாசனகப் படலம் என ஒரு படலம் பாடியிருக்கிறார். இப்படலத்திற்கு ஆதாரம் இவர் எங்கே கண்டாரோ தெரியவில்லை.

முன்னர் வால்மீகி கதையில், இராவணன் இராம னுடைய தலையைப் போல மாயையாய்ச் செய்யச் செய்து, அதைத் தன் வீரர் வெட்டிக் கொண்டு வந்தனரெனக் கூறினான் எனவும், அது கண்டு சீதை அழுதனள் எனவும், அந்தச் சமயத்தில் வானரர் இலங்கையைச் சூழ்ந்த செய்தியைத் தூதர் கூறினரெனவும் செய்திகள் கண்டோம்.

இராமனுடைய தலையை வெட்டிக் கொண்டு வந்ததாகக் கதை கூறுவதா எனப் பித்தேறிய கம்பர் அதனை முற்றிலும் அவ்விடத்து மறைத்துவிட்டு, இராமனுடைய தலைக்குப்பதிலாகச் சனகனைப் போல் ஒர் உருவைக் கொணர்ந்து நிறுத்திச் சீதையை மயக்கினனெனக் கூறுகின்றனர்.

காமப்பித்தேறிய கம்பருக்குத் தனது மன நிலையை இராவணன் மேலும் இராமன் மேலும் ஏற்றி அடிக்கடி கவிகள் பாடவேண்டுவது இன்றிய மையாத இயற்கையல்லவா? கம்பர் தமது விருப்ப மான கொங்கைச் சொல்லை இப்படலத்திலேயே மூன்றிடங்களில் சொல்லி மகிழ்கிறார். இராவண னைச் சூழ்ந்து வந்த மகளிரைக் கூறுமிடத்தும், இராவணன் தன் தம்பி மடிந்தமைகேட்டுப் புலம் பியபோதும், சீதையைப் பற்றிச் சொல்லும்போதும், இராவணன் அழுவதைக் கண்டு சீதை உடல் பூரித்தாளென்று சொல்லும்போதும் கம்பர் சிந்தை மறவாது புகழ்கிறார்.

இராவணன் சீதை காலில் வீழ்ந்தானென அவர் அடிக்கடி கூறுவது சிறு மனத்தையே காட்டுவதாகும். இராவணன் சீதையை நோக்கித் தன்னைக் கூடினால் குற்றம் இல்லை என்பதற்கு மேற்கோளாக அகலிகைக் கதையைக் கூறினான் என அவர் கூறுவது நோக்கத் தகுந்தது.

“அந்தரம் உணரின் மேல் நாள் அகலிகை என்பாள் காதல் இந்திரன் உரத்தை நல்கி எய்தினான் இழுக்குற்றாளோ?” (பாடல் 16)

இத்தகைய கதைகள் ஒழுக்கக் கேட்டையே விளைவிக்கும். ஆடு மாடுகள், பறவைகள் போல யாதொரு கட்டுப்பாடும் இல்லா வாழ்க்கையையே இவை பெருக்கும். ஒருவன் மனைவி மற்றொருவ னோடு போவது குற்றமில்லை என்பதே ஆரியர் சட்டம். இதை நாம் முன்னர் எடுத்து விளக்கி யிருக்கிறோம்.

இதன்படியே தசரதன் தன் மனைவியரை வேள்வித் தலைவருக்குத்தானே கொடுத்து, இரா மன் முதலிய நான்கு பிள்ளைகளைப் பெற்றான். இதன்படியேதான் குந்தி தருமபுத்திராதியரையும், வேதவியாசன் மகாமுனிவன் அறுதலிகளைக் கூடித் திருதராட்டிரன், பாண்டு முதலிய பிள்ளை களையும் பெற்றெடுத்தனர்.

பெரிய நிலையில் தெய்வம் போலப் பாராட் டப்படுகின்ற இவர்களே இந்நிலையில் ஒருவன் பல பெண்களையும், ஒருத்தி பல ஆண்களையும், ஒருவன் முனிவன் என்ற பெயரை வைத்துக் கொண்டு பல விதவைகளையும் கூடுவதென்பது மக்களுக்கு எத்தகைய தீய ஒழுக்கத்தை உண் டாக்குமென்பதை அறிஞர் சிந்தித்து அறிந்து கொள்வார்களாக ஒருவனோ ஒருத்தியோ தன் மனைவி அல்லது கணவன் இறந்துபோனால், பின்னர் வேறு ஒருத்தியையோ ஒருவனையோ மனமொப்ப மணந்திருத்தல் அறிஞர் ஒப்பும் உறுதியே. இதற்கு மாறாக ஒருவன் தன் மனை வியை வைத்துக் கொண்டே வேறு பெண்களைத் தேடுவதும், ஒருத்தி தன் கணவன் இருக்கும் போதே வேறு ஆடவரைத் தேடுவதும் அறிஞர் கண்டித்து ஒதுக்கத்தக்க செயல்களே.

சீதை தன் கணவனுடைய தலையைக் கண்ட போது, ஒருவேளை மனம்மாறுதல் கூடுமென எண்ணி, இராமனது தலையைக் கொண்டு போய்ச் சீதையை மயக்கினானென வால்மீகி கூறுவது ஒருவாறு பொருந்தினும் பொருந்தும். இதுவே பொருந்தா உரை என முன்னர்க் கண்டித்து ஒதுக்கியதோடு, இது இடைச்செருகல் என்பதைச் சீனிவாசய்யங்காருடைய குறிப்புரை யாலும் எடுத்துக் காட்டினோம்.

இது கிடக்க இங்கே கம்பர் சீதையினுடைய தந்தையப் பிடித்துக் கொண்டு வந்து அவன் வாக்கால் சீதையை வசப்படுத்தலாமென இராவ ணன் செய்ததாகக் கூறும் மாயங்கள் மிகப் பொருந்தாதனவாம். தன்னுடைய தந்தையை நன்கறிந்த சீதை, அவனுடைய தகாத உரை கேட்டால் அது மாயமென எண்ணுவாளேயொழிய உண்மையென எண்ணுவாளா? ஒருவேளை அவனுடைய பேச்சே இல்லாமல் அவனை இராவணன் வெட்டிவிடுவேனெனக் கூறிச் சீதையை வசப்படுத்த முயன்றான் என்றால், ஒருவேளை பொருந்தும். இனி மேற் செல்லுதும்.

(தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner