எழுத்துரு அளவு Larger Font Smaller Font


“ஆலவாய் அழகராம் சிவபெருமானின் அறுபத்து நான்கு திருவிளையாடல்களைப் பாடும் திருத்தொண்டர் புராணத்தைச் (பெரிய புராணத்தை) சைவ மெய்யன்பர்கள் தலைமேல்வைத்துக் கொண்டாடுவார்கள்.

ஆனால் அந்த நாள் முதலே கட்சி மாறித்தனங்களும், மாற்று மதத்துக்காரர் மனைவியரை மானபங்கப்படுத்த வேண்டும் என்னும் மதவெறியுணர்ச்சியும், 8000 சமணர்களை ஈவிரக்கமின்றிக் கழுவேற்றிக் கொன்ற கயமைத்தனங்களும் பெரியபுராணத்தில் பதிவாகியுள்ளன.”

மூன்றாம் திருமுறை திருஞானசம்பந்தர் தேவாரப் பதிகங்களில் திருவாலவாய்ப்பண் -கவுசிகம் என்னும் தலைப்பில் 3ஆவது பாட்டு,


மண்ண கத்திலும் வானிலும் எங்குமாம்
திண்ண கத்திரு வாலவா யாய்அருள்
பெண்ண கத்தெழில் சாக்கியப் பேய்அமண்,
தெண்ணர் கற்ப ழிக்கத்திரு வுள்ளமே


இந்தத் திராவிடர்களின் (பெண்களை) - மனைவிகளை, தானே கற்பழிக்கத் திருவுளமே என்பது சம்பந்தர் பாடினதா? அல்லது வேறு யாரையாவதா? அல்லது இதற்கு வேறு பொருளா? என்கிற விவரத்தைப் பண்டிதர்கள் - சைவப் பண்டிதர்கள், அல்லது கிருபானந்தவாரியார், திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் போன்ற சைவ அன்பர்கள் விளக்கினால் கடப்பாடுடையவனாக இருப்பேன். (குடிஅரசு சித்திரபுத்திரன் கட்டுரை, 12.8.1944).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner