எழுத்துரு அளவு Larger Font Smaller Font


"ஒழுக்கம் உயர்குலம்"-இக்கட்டுரை 1917 ஜூலை 10இல் வெளிவந்துள்ளது. கட்டுரையாளர் ரா.பி. சேதுப்பிள்ளை பி.ஏ. "ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்; இழிந்த பிறப்பாய் விடும்"

எனும் குறளுக்கு விளக்கமளித்து எழுதப்பட்ட இக்கட்டுரையில் பார்ப்பனர்கள் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ளனர். இக்காலத் திலே நம் கைப்பொருளையெல்லாம் நம் மக்கள் கல்வியிற் செலவிடாது, நம்மை அடியோடு ஒழிக்க எண்ணங்கொண்டுள்ள வேதியரென்னும் பார்ப்பார்க்குக் கொடுப்பது அறியாமையே யல்லவா?

ஜாதி, குலம், பிறப்பு என்னும் பிரிவுகளும், பாகுபாடுகளும் பிற்காலத்தில் பார்ப்பன ரால் நம் நாட்டிற்குண்டாகிய பெருங் கேடென்பதை நாம் நன்றாக உணர வேண்டும். "பாம்பிற்குப் பாலூட்டி வளர்ப் பாரும், வேங்கைக்கு நோய் தீர்ப்பாரும் உலகில் உண்டா?

நம்மைக் கொல்ல நினைத்துள்ள எதிரியிடம் நம் ஆயுதத்தை கொடுத்தால் சும்மா விடுவானா? ஆகவே திராவிட நன்மக்களாகிய நாமனைவரும் இன்றுமுதல் நன்மை தீமைகளில் பார்ப் பனனுக்குக் கொடுக்க நினைத்துள்ள பொருளை நம் மாணவர்களின் கல்விக்காக உபயோகப்படுத்துவ தென்று கங்கணம் கட்டிக்கொள்வோமானால் திராவிட நாடு சீரும் சிறப்பும் பொருந்தி உன்னத பதவியடையும் என்பதில் சிறிதும் அய்ய மில்லை.

திராவிடராகிய நாம் நன்மை தீமை களைக் கொண்டாடும் போது அளவிறந்த பொருளைத் தீயொழுக்கம் குடிகொண் டிருக்கிற பார்ப்பனருக்குக் கொடுத்து ஆதரிக்கின்றோமல்லவா?

அனுதினமும் ஆயிரம் ஆயிரமாக பார்ப்பனர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் பொருளையெல்லாம் திராவிட நிதியாகச் சேர்த்து ஒவ்வொரு சிற்றூரிலும் பள்ளிக் கூடமும் கல்லூரியும் ஸ்தாபிக்க வேண்டும். முயற்சி செய்வோமானால் நம் சிறுவர்கள் கல்வியில் தேர்ச்சியடைந்து முன்னேற்ற மடைவது திண்ணம்." (ப.6)

1917 அக்டோபர் 26இல் வெளிவந்த திராவிடனில் இரா.பி.சேதுப்பிள்ளையின் பேருரை பின்வருமாறு வெளியிடப்பட் டுள்ளது.

“ஒருமுறை சங்க நூல்களை ஒதுவோ மாயின் பண்டைக்காலத்தில் இருந்த நம் முடைய ஏற்றமும் அப்போது ஆரியர்களி ருந்த நிலையும் நன்கு விளங்கும் என்றும்,

இப்போது உலகெங்கும் பிரசித்திப் பெற்றுள்ள விவேகானந்தர், மெஸ்ஸர்ஸ் கோஷ், சர்.சின்ஹா. சர்.சங்கரன் நாயர், பிபின் சந்திர பால் இவர்கள் யாவரும் பார்ப்பனரல்லாதாரே’’ என்றும் சொன்னார்.

"பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்" என்னுங் குறளை இனிது விளக்கிக் காட்டி னார். நம் பாஷையில் பாண்டித்ய மடைந்துள்ளவர்கள், எம்.ஏ. பட்டம் பெறலாமென்றிருந்தும் இப்போது எடுக்கப் பட்டுச் சம்ஸ்கிருத்திலும் பாண்டியத்துவ மடைந்தவர்களுக்குத் தான் எம்.ஏ. பட்டங்கொடுக்க வேண்டு மென்றும், நம் தலையில் நாமே மண்ணை வாரிப்போட்டுக் கொண்டது போல் நம்முடைய பணத்தைச் செலவழித்துப் போலி பார்ப் பனர்கள் அந்த நன்மையை அடையச் செய்வதை இனி நிறுத்திவிட நம்முடைய நன்மைக்காக யாவருங் கங்கணங்கட்டிக் கொண்டுழைக்க வேண்டுமென ரா.பி.சேதுப்பிள்ளை கூறினார்.

நூல்: நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு

நூலாசிரியர் பெ.சு.மணி

பக்கம் 323 & 324

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner