எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!! - 2

அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு, மொழியில் ஆதிக்கம் செலுத்தி

ஆதாயம் பெறவே ஆலய நிர்வாகத்தைக் கைப்பற்ற ஆரியர்கள் துடிக்கிறார்கள்!

மறத்தமிழர்களே! மடாதிபதிகளே! விழிப்போடிருங்கள்!

 

கோயில்கள் என்பவை இந்நாட்டில் பெரும்பான் மையாக உள்ள இந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்ற, அவர்களின் உணர்வோடு தொடர்பு கொண்ட நிறுவ னங்கள் என்பதாலும் இந்த நிறுவனங்களுக்கு ஏராள மான வருவாய் வருவதாலும், ஏராளமான சொத்துக்கள் இருப்பதாலும் இக்கோயில்களைக் கைப்பற்றுவது என் பது ஒரு மிகப்பெரும் கலாச்சார நிறுவனத்தின் சொத் துடமை நிறுவனத்தின் நிருவாகத்தை கைப்பற்றுவது ஆகும் என சரியாக முடிவு செய்து அதற்கான வேலை யில் முனைந்து செயல்பட்டு வருகின்றனர். இதற்காக தங்களுக்கு கைவந்த கலையான பொய்யைப் பரப்புவது, அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது, நிருவாக ரீதியான தலையீடுகளை மிகுந்த வன்மத்தோடும்,  மிரட்டும் பாணியிலும் செய்வது போன்ற இழிவான செயல்களை செய்துவருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள அறநிலையத்துறை ஆளுகைக்கு உட்பட்ட கோயில்கள் எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றன என்பது குறித்து பொதுமக்களிடம் போதிய தகவல்கள் போய்ச் சேராததும் இந்த ஆதிக்க சக்திகளின் பொய்ப்பிரசாரத்திற்கு மக்க ளில் சிலர் பலியாக வழிவகுப்பதாக உள்ளது. காலம் கால மாக ஊடகங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள இந்த ஆதிக்க கும்பலுக்கு தற்போது அறநிலையத்துறை நிருவாகம் குறித்து பொய்யான தகவல்களை ஊடகங்கள் மூலம் பரப்புவது எளிதாகவும் உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இன்று 38,618 இந்து சமய கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளும் 17 சமண சமய கோயில்களும் ஆக 38,635 சமய நிறுவனங்கள் உள்ளன. இந்த சமய நிறுவனங்கள் ஆண்டு வருவாய் அடிப்படையில் பட்டியலை சாராதவை என்றும் பட்டியலை சார்ந்தவை என்றும் சட்டத்தால் வகைப்படுத்தப்படுகின்றன. பட்டி யலை சாராத கோயில்கள் உதவி ஆணையர் நிலை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. பட்டியலை சார்ந்த கோயில்கள் இணை ஆணையர் நிலை அலுவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான கோயில்களைக் கொண்ட, கோயில் நகரங்களென்றே அழைக்கத்தக்க நகரங்கள் பல உள்ளன. காஞ்சிபுரம், கும்பகோணம், நாகப்பட்டினம், சிறீரங்கம், திருக்கண்ணபுரம், திருவாரூர், சென்னை என சிலவற்றைக் கூறலாம்.

இந்நகரங்களில் உள்ள பெரும்பான்மை இடங்கள் அல்லது குறிப்பிடத்தக்க அளவு அதிகப்படியான இடங்கள் இங்குள்ள கோயில்களின் சொத்துக்களே ஆகும். அய்ம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண நிலமதிப்பு கொண்டவையாக இருந்த இந்த இடங்கள் தற்போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப் புள்ளவையாக மாறி உள்ளன.

இந்த இடங்கள் காலம்காலமாக தனியாரால் பெரும்பாலும் மனைப்பகுதிகளாக மனைவாடகைதாரர் என்ற அடிப்படையிலோ அல்லது ஆக்கிரமிப்புதாரர் என்ற அளவிலோ அவர்தம் சுவாதீனத்தில் உள்ளன. இவற்றில் சிறிதும் பெரிதும் மிகப் பெரிதுமான கட்டடங் கள் அவர்களால் கட்டப்பட்டு அவை குடியிருப்புகளா கவோ வணிகம் செய்யும் இடங்களாகவோ பயன்பாட்டில் உள்ளன. இந்த நிலைமை மேற்குறித்த கோயில்கள் நிறைந்த நகரங்களில் மட்டுமல்லாது பிற ஊர்களில் உள்ள கோயில்களின் அசையாச் சொத்துக்களுக்கும் பொருந்தும்.

மேற்கண்ட 38,635 கோயில்கள் மற்றும் அறநிறுவ னங்களை நிர்வகிக்க 650 செயல் அலுவலர் பணியிடங் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றிலும் 250 பணியிடங் களில் தான் தற்போது செயல் அலுவலராகப் பணி புரி கின்றனர். மற்றவை  காலியாக உள்ளன. இத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பரம்பரை அறங் காவலர்கள் நிர்வகிக்கும் கோயில்கள், நடைமுறை நிர்வாகிகள் நிர்வகிக்கும் கோயில்கள் என்ற வகைக் கோயில்களும் உள்ளன. பல ஊர்களில் அவ்வூரில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் ஆயிரத் திற்கும் மேற்பட்ட மனை வாடகைதாரர்கள் கையில் உள்ளன.

இந்த மனைகளில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மனைவாடகைதாரர்களுக்கு சொந்தமானவை. குடியி ருப்பாக பயன்படுத்தப்படும் மனைகளின் வாடகைதாரர் களிடமிருந்து வாடகை வசூல் செய்வது என்பது சிரமமான காரியமாக உள்ளது. அவர்களை வெளியேற்று வதும் பல்வேறு சட்ட செயல்பாடுகளோடு பின்னிப் பிணைந்து சிரமமாக உள்ளது. கோயில் இடத்தில் குடியிருப்பவர்கள் தங்களுக்கென்று சங்கம் அமைத்துக் கொண்டு கோயில் நிர்வாகத்திற்கு எதிராக போராடுவது, வழக்கு நடத்துவது எனச் செயல்பட்டு வருகின்றனர்.

செயல் அலுவலர்களின் எண்ணிக்கை மிகவும் குறை வாக உள்ளதால் ஒரு செயல் அலுவலர் இருபதுக்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வாகம் செய்யும் நிலை உள்ளது. இதனால் மேற்கண்ட வாடகை வசூல், ஆக் கிரமிப்புதாரர் வெளியேற்றம் ஆகிய நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன. இந்து சமய அறநிலை யத்துறை சட்டத்தில் சட்டப்பிரிவு 78 மூலம் வாடகை செலுத்தாத வாடகைதாரர்கள், நேரடி ஆக்கிரமிப்புதாரர் கள் ஆகியோர் மீது இணை ஆணையர் நீதிமன்றத்தில், வழக்கு தொடுத்து வெளியேற்று நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.

இதன்மூலம் ஆயிரக்கணக்கானவர்கள் மீது அந்தந்த மண்டல இணை ஆணையர் நீதிமன்றங்களில் வழக்கு கள் போடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரும்பான்மையான வாடகைதாரர்கள் கோயிலுக்கு அருகிலுள்ள சொத்துக்களில் இருந்து கொண்டு வாடகை செலுத்தாமல் இருப்பதால் அவர்கள் மீது வெளியேற்று நடவடிக்கை எடுக்கும்போது, அவர்கள் கோயில் நிர்வாகத்தை எதிரியாக பாவிக்கின்றனர். அதாவது கோயில்களை சுற்றிலும் எதிரிகள் உரு வாகிவிடுகின்றனர். எனினும் பல செயல் அலுவலர்கள் தங்களுக்கான ஆதரவின்மையையும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் சொத்துக்களை மீட்டுள்ளனர். அதன் பொருட்டு தாக்குதல்களுக்கும் அவமரியாதைக ளுக்கும் உள்ளாகி உள்ளனர்.

சமூகநீதி போராட்டத்தின் மிகப்பெரும் வெற்றியாக பெண்களும் செயல் அலுவலர்களாக பதவிக்கு வந்திருப் பதை குறிப்பிடலாம். ஆனால் கோயில் நிர்வாகத்தை பெண்கள் நிர்வகிக்கும்போது ஆதிக்கக் கருத்துக்களால் பீடிக்கப்பட்டுள்ள அர்ச்சகர் போன்றோர் கோயில் நிர்வாகிக்கு தரவேண்டிய முதல் மரியாதையை பெண் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு தர தயக்கம் காட்டும் நிலை உள்ளது. இந்த அநீதியை உடைத்து சிறீரங்கம் போன்ற கோயில்களில் பெண் அதிகாரிகள் அந்த முதல் மரியாதையை செய்ய பணித்து வெற்றி பெற்றுள்ளனர்.

இன்று இடஒதுக்கீட்டின் பலனாகவும் சமூக விழிப்புணர்வின் காரணமாகவும் தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியின் காரணமாகவும் ஒடுக்கப்பட்ட சமூ கங்களிலிருந்து வந்தவர்கள் கோயில் நிர்வாகிகளாக இருந்து ஜாதி படிநிலையில் உயரத்தில் உள்ளவர்களுக் கும் சம்பளம் வழங்கும் தகுதியில் உள்ளனர்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த அதிகாரிகள் ஆதிக்க சாதியினர் செல்வாக்கிலுள்ள வைதீக கோயில் களில் கூட நிர்வாகிகளாக இன்று உள்ளனர். இந்த சமூகப் புரட்சியை முறியடிக்கவே கோயில் நிர்வாகங்கள் சீர் கெட்டுவிட்டதாக திட்டமிட்டே பிரச்சாரம் செய்யப்படு கின்றது.

அறநிலையத்துறையை விமர்சிப்பதற்காகவே உயர் ஜாதியினரால் (பார்ப்பனரால்) அறம் இல்லாதத் துறை என்ற முகநூல் பக்கம் ஒன்று இயங்கி வருகிறது. அதில் வருணாசிர தர்மத்தைக் கருத்தில் கொண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் நிர்வாகிகளாக உள்ள ஆண் பெண் அலுவலர்களை குறிக்க வேசி மகன்கள், வேசிமகள்கள் என்று இழிவாக பதிவுகள் இடுகின்றனர்.

இன்று சமூக நீதி கோட்பாட்டின் வெற்றியின் விளைவாக ஒடுக்கப்பட்ட ஜாதியினர் திருக்கோயில்களில் அலுவலர்களாகவும் அறநிலையத்துறை ஊழியர்களா கவும் கோயில் பணியாளர்களாகவும் பணியாற்றி வரு கின்றனர்.

இவர்களெல்லாம் “சூத்திரர்கள்” என்ற பொருளி லேயே மேற்கண்ட கொச்சையான மோசமான “வே-மகன் கள், வே-மகள்கள்” போன்ற வசை மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வாறு போடப்படும் பதிவுகளில் பெரும் பான்மையான பதிவுகள் தவறானவை என்பதும், பொய்யானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசு சம்பளம் பெறும் அரசு ஊழியர்களாக உள்ள அலுவலர்கள் இத்தகு தாக்குதல்களை எதிர்த்து ஒருங் கிணைந்து பதிலடி கொடுப்பது நடைமுறை சாத்தியமில் லாததாக உள்ளது. பதில்கள் தரப்படாததால் பொய்கள் திரும்பத் திரும்ப பரப்பப்பட்டு நிலைநாட்டப்படுகின்றன.

ஜெர்மனியில் நாஜிக்கள் கட்டவிழ்த்துவிட்ட பொய் பிரசாரத்திற்கு இவை குறைந்தவையல்ல. அங்கு பெரும் பான்மை ஜெர்மானியர்களுக்கும் சிறுபான்மை யூதர் களுக்குமான முரண்பாட்டை நாஜிக்கள் தங்கள் பாசிச அரசியலை பரப்பவும், படுபாதக செயல்களைச் செய்ய வும் பயன்படுத்திக்கொண்டு பொய்ப் பிரசாரத்தை திட்ட மிட்டு பரப்பி வரலாற்றை ரணகளமாக்கினர். இங்கு பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட இந்துக்களிலிருந்து வந்துள்ள அலுவலர்கள், பணியாளர்களுக்கெதிராக ஒரு சிறுபான்மை இந்து ஆதிக்க சக்தி, கோயபல்ஸ் பிர சாரத்தை தங்கள் ஆதிக்கத்திலுள்ள ஊடகங்கள் வாயி லாக பரப்பி கோயில்களை கைப்பற்ற முயற்சி செய்து வருகிறது.

இத்துறையில் வேலைபார்க்கும் உதவி ஆணையர், இணை ஆணையர், கூடுதல் ஆணையர் ஆகிய நிலை யில் உள்ள அலுவலர்கள் மற்ற அரசு துறைகளில் உள்ள அதே தகுதியில் உள்ள அலுவலர்களுக்கு உள்ள உரி மைகளையும், அலுவல்பூர்வ வசதிகளையும் பெற பயன்படுத்த தகுதியுடையவர்கள். அந்தந்த அலுவலர் தகுதிநிலைக்கேற்ப ஜீப் அல்லது கார் போன்ற வாகனங் களை அலுவல் சார்ந்து பயன்படுத்த அவர்களுக்கு தகுதியும், உரிமையும் உண்டு. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் ஜீப் அல்லது கார் போன்றவற்றில் ஏறவே தகுதியில்லாதவர்கள்  போலவும், அவர்கள் தாழ்ந்தவர்கள் போலவும் அவர்களை அவமானப்படுத்தும் விதமாக செய்திகளை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களில் வெளியிடச்செய்து குதூகலிக்கின்றனர்.

துறையின் பல்வேறு பணிகளான தலைமை அலு வலகத்திற்கு செல்வது, உயர் அலுவலர்களை சந்திக்கச் செல்வது, தலைமைச் செயலகம் செல்வது, கோயில் சொத்துக்களையும், கோயில் பணிகளையும் பார்வை யிடச் செல்வது, பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்வது, வருவாய்துறை, காவல்துறை அலுவலர்களைச் சந்திப் பது, அமைச்சர் பெருமக்களைச் சந்திப்பது எனப் பல அலுவல்சார் பணிகளுக்கு அலுவலர்களுக்கு கார் அல்லது ஜீப் இன்றியமையாதவை. இவற்றைப் பயன் படுத்துவதை கொச்சைப் படுத்துவது அநாகரீகமான செயலாகும்.

இந்து சமய அறநிலையத்துறை என்பது ஒரு குறிப் பிட்ட மதத்தின் கோயில்களை, மடங்களை, அறநிலையங் களை நிர்வகிக்கும் ஒரு துறை. இந்திய அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கோட்பாட்டின்படி இத்துறையின் செல வினங்களை அரசின் பொது கருவூலத்திலிருந்து மேற் கொள்ள இயலாது.

இத்துறை அறநிறுவனங்களிலிருந்து ஈட்டப்படும் வருவாயிலிருந்தே இத்துறையும் அறநிறுவனங்களும் நிர்வகிக்கப்படுகிறது. இதற்கான சட்டப்பிரிவுகளும், சட்ட விதிகளும் கடைபிடிக்கப்படுகின்றன. இந்த நிலை யில் பொதுமக்கள் மத்தியில் பொய்களைப் பரப்பி துறை மீது அவநம்பிக்கையை உருவாக்கும் பணியை இந்தக் காவிக்கூட்டம் செய்து வருகிறது.

இன்றைய சூழ்நிலையில் துறவு வாழ்க்கையை ஏற்றுக்கொண்டுள்ள மடாதிபதிகள் கூட மகிழுந்தில்தான் பயணிக்கிறார்கள். சக்தியுள்ள சாமியார்கள் தங்கள் சக்தியின்மூலம் இடம்விட்டு இடம் தானாக சென்றுவிட முடியாமல் தானியங்கி வாகனங்கள் மூலமே செல்ல முடிகிறது. இப்படியிருக்க அறநிலையத்துறை அலுவலர் களின் வாகனப்பயன்பாட்டை புகார் கூறுவது அராஜக மானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும்.

அறநிலையத்துறை மீது வீசப்படும் இன்னொரு அவதூறும் அறநிலையத்துறை புராதனக் கோயில்களை எல்லாம் இடித்துத் தள்ளுகிறது என்பதாகும். புராதன கோயில்களுக்கு பணி செய்வது தொடர்பாக தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறநிலையத் துறை தன் கோயில் அலுவலர்களுக்கு தெரிவித்து கடைபிடிக்கச் செய்கிறது. அத்தகு பணிகளை கண்காணிப்பதிலும் கவனமாக உள்ளது.

தமிழ்நாடு அளவில் ஓரிரு இடங்களில் உள்ளூர் மக்களால் நடந்த கோயில் புனரமைப்புப் பணிகளில் ஏற்பட்ட தவறுகளை பெரிதாக்கி ஒட்டுமொத்தமாக அற நிலையத் துறையே கோயில்களை இடிக்கும் துறையாக மாறிவிட்டதுபோல் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு அதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக நடந்துவந்த கோயில் பணிகள் முடக்கப்பட்டுள்ளன.

முட்டுக்கட்டையை ஏற்படுத்தி பணிகளை முடக்கிய வர்களே தற்போது அறநிலையத்துறை  பணிகளை செய்யவில்லை என்றும், பணிகளை செய்ய காலம் தாழ்த்துகிறது என்றும் பிரச்சாரம் செய்கின்றனர்.

பணி என்பது அந்தந்த கோயில்களின் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டு ஆணையர் பொது நலநிதி போன்ற நிதியங்களின் நிதியுதவியினாலோ, உள்ளூர் மக்களின் நன்கொடையினாலோ அல்லது பெரும் நன்கொடை யாளர்களின் மூலமாகவோ செய்யப் படுகிறது. தற்போது உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் யுனெஸ்கோ அமைப்பின் வல்லுநர், தொல்லியல் துறை வல்லுநர் போன்ற வல்லுநர்களை உள்ளடக்கிய குழு ஒன்று அமைக்க உத்தரவிடப்பட்டு அக்குழுவின் மூலமாக பணிகள் பரிசீலிக்கப்பட்டு அதன் பிறகே பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இக்குழு கூடுவதிலுள்ள கால தாமதம் பணிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி கால தாமதத்தை ஏற்படுத்துகிறது.

இதனால் உள்ளூர் மக்கள் மத்தியில் அறநிலையத் துறைக்கு அவப்பெயர் உருவாகிறது. மேலும் ஆண்டுக்கு 150 கோடிவரையிலான மதிப்பீட்டில் தமிழ்நாடு முழு வதும் நடந்துவந்த பணிகள் பாதிக்கப்பட்டு இன்று ஆண்டுக்கு வெறும் 79 கோடி மதிப்பீடு அளவிலான பணிகளாக குறைந்து விட்டது.

(நாளை தொடரும்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner