எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!! - 3

செயல் திறனற்ற ஆட்சி தமிழகத்தில்!

கடைசி வாய்ப்பில் கோயில்களை

கைப்பற்ற  பி.ஜே.பி. சூழ்ச்சி!

திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரம்!

ஒட்டு மொத்தத் தமிழர் எதிர்ப்பே ஒரே தீர்வு!

 

இதனால் இந்தப் பணிகளை நம்பியிருந்த கோயில் கட்டடக்கலையை வாழவைக்கும் ஸ்தபதிகள், கோயில் கட்டடக் கலைஞர்கள், கட்டடப் பணியாளர்கள் ஆகி யோரது வாழ்வாதாரம் சீர்குலைக்கப்பட்டுள்ளது.

இதில் குறிப்பிடப்படவேண்டிய விஷயம் என்ன வென்றால் பணி மேற்கொள்ளப்படும் கோயில்களில் பெரும்பான்மையானவை அக்கோயில் அமைந்துள்ள பகுதியிலுள்ள சமூக மக்களின் குலதெய்வ கோயில் களாகும். இக்கோயில்களின் பணிகளில் தொல்லியல் துறை தலையீட்டினை ஆதரிக்கும் விதமாக தற்போ தைய சூழ்நிலை உள்ளதால் பணிகளில் ஏற்படும் கால தாமதம், அந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள தெய் வத்தை குலதெய்வமாகக் கொண்டுள்ள பக்தர்களுக்கு வேதனையையும், துறையின் மீது அதிருப்தியையும் ஏற்படுத்துவதுடன், கோயில் கட்டடக் கலைஞர்களின் வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கி நிற்கிறது.

இதுமட்டுமில்லாமல் தமிழ்நாடு இந்து சமய அற நிலையத்துறை சட்டம் உட்பட இந்தியாவில் உள்ள அறநிலையத்துறை சட்டங்களின் செல்லு தன்மையை கேள்விக்குள்ளாக்கி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொட ரப்பட்டு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பை பொறுத்தே அறநிலையத்துறையின் எதிர்காலம் அமையவுள்ளது. மேலும் கோயில்களில் பசுமடங்களை (கோசாலை) முறையாக பராமரிக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கோயில் நிர்வாகத்தில் தலையீடு செய்ய இந்தச் சிறுபான்மை ஆதிக்க கூட்டம் முயன்றதையும், முயன்று வருவதையும் அறநிலையத் துறையை கைப்பற்றும் திட்டத்தின் ஒருபகுதியாகவே பார்க்கவேண்டியுள்ளது. (இது பா.ஜ.க. திட்டம்)

தற்போது உச்சகட்டமாக சிலை திருட்டுப்போன்ற குற்றச்செயல்களில் அறநிலையத்துறை அதிகாரிகளை சம்பந்தப்படுத்தி கைது செய்வது, குற்றவியல் வழக்குகள் போடுவது போன்ற கொடுமைகளும் நடந்து வருகின்றன. அரசு அலுவலர்களான இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் தங்கள் அலுவல்சார் பணிகளை செய்து வரும்போது உரிய ஆதாரங்களின்றி கூறப்படும் புகார் களை அடிப்படையாகக்கொண்டு குற்றவியல் நட வடிக்கை மேற்கொள்வது என்பது அறநிலையத்துறை அதிகாரிகளை அச்ச உணர்வுக்கு ஆட்படுத்தியுள்ளது.

மாத சம்பளத்திற்காக சாதாரண குடும்பங்களிலிருந்து அரசுப் பணி என்ற சமூக மதிப்பிற்காகவும், கோயில் பணி என்கிற மனநிறைவுக்காகவும் வேலைக்கு வரும் சம்பளக்காரர்களை சிலைகடத்தல் கிரிமினல்களாக சித்தரிப்பதன் மூலம் பொதுமக்கள் மத்தியில் துறையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தி அறநிலையத் துறையின் நிர்வாகத்திலிருந்து கோயில்களை விடுவித்து தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர சாதகமான சமூக உளவியல் கட்டமைக்கப்படுகிறது.

சிலைத் திருட்டு நடந்ததாக கூறப்படும் பந்தநல்லூர் சம்பவத்தில் சிலை திருட்டு நடந்த காலத்தில் பணியில் இல்லாத, சிலை திருட்டு நடந்த கோயில் நிர்வாகத்தின்மீது கண்காணிப்பு செய்யும் அதிகாரத்தை மட்டுமே கொண்ட உயர் அதிகாரியை கைது செய்து சிறையில் அடைத்ததன் மூலம் ஒட்டுமொத்த அறநிலை யத் துறையிலும் ஒருவித பயத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

பொய்யான குற்றவியல் நடவடிக்கையால் பாதிக்கப் பட்டிருப்பது அந்த அலுவலர் மட்டுமல்ல, அவரது குடும் பமும், அவரது குடும்பத்தின் எதிர்காலமும் சேர்த்துதான். நாளை நீதி விசாரணையின் முடிவு அவரை குற்றத்தி லிருந்து விடுவிக்கும் என்றாலும் அவருக்கு எதிரான அநீதியான கைது நடவடிக்கையும் சிறைவாழ்க்கையும் உளவியல் அழுத்தமும் துறை ரீதியான தற்காலிக பணி நீக்கமும் மீட்கப்பட முடியாத வாழ்வியல் சேதாரத்தை ஏற்படுத்தி மிகப்பெரும் அறப்பிறழ்வை நிலைநாட்டி விடும் என்பதே உண்மை.

ஏற்கனவே குறிப்பிட்டபடி 650 செயல் அலுவலர் பணியிடங்களில் பாதிக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஒவ்வொரு செயல் அலு வலரும் பத்து, இருபது கோயில்களையும் அவற்றின் சொத்துக்களையும் நிர்வகிக்கும் பணிச்சுமையில் உள்ள னர். இந்தப் பணிச்சுமையின் காரணமாக ஏற்படும் நிர்வாகக் குறைபாடுகளுக்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது இந்து சமய அற நிலையத்துறையில் செயல் அலுவலராக வேலை செய்வது என்பதை ஒரு வாய்ப்பாக வரமாகக் கருதாமல் ஒரு வருந்தத்தக்க சாபமாக கருதும் மனநிலைக்கு அரசு வேலைக்கு வரும் இளைஞர்களை தள்ளியுள்ளது. தமிழ்நாடு தேர்வாணையம் மூலம் இந்தத் துறைக்கு செயல் அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் பணிச் சுமையின் காரணமாகவும் பணிப் பாதுகாப்பின்மை காரணமாகவும் வேலை வாய்ப்புக்கான தேர்வாணைய தேர்வுகளை எழுதி வேறு வேலைகளுக்குச் சென்று விடுகின்றனர்.

இதன் மூலம் செயல் அலுவலர் பணியிடங்கள் காலியாகவே இருக்கும் நிலை தொடர்கிறது. இத்தகு சூழ்நிலையில் அலுவலர்களை அதுவும் மூத்த அலுவலர்களையே அவர்களது அலுவல்சார் பணியில் கிரிமினல் வழக்குகளில் சேர்த்து கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை படித்த இளைஞர்கள் இந்தத் துறைக்கு வருவதற்கே அஞ்சும் நிலையை உருவாக்கி யுள்ளது.

அறநிலையத்துறை அதிகாரிகளையும் ஊழியர் களையும் தாக்கி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனக் கும்பல் அவதூறுகளை பரப்புவதற்கென்றே முகநூல், வாட்ஸ்அப் போன்ற வற்றைப் பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் தாங்கள் பகிரும் பொய்ச் செய்திகளில் அறநிலையத்துறை அலு வலர்களையும் ஊழியர்களையும் வேசி மகன்கள், வேசி மகள்கள் என்று கேவலமாக குறிப்பிடுவதன் மூலம் இத்துறையில் வேலைப்பார்க்கும் அலுவலர்கள், ஊழி யர்களிடையே இப்படியெல்லாம் கேவலப்படுத்தப்படும் ஒரு பணியில் நீடிப்பதா என்ற வேதனை விதைக்கப் படுகிறது.

இதன் மூலம் இத்துறை அலுவலர்கள் ஊழியர்களின் மன உறுதியைக் குலைத்து அவர்களை உளவியல் ரீதியாக சிதைக்கும் முயற்சியை காவிக்கும்பல் செய்து வருகிறது. குறிப்பாக இத்துறையில் பணிபுரியும் பெண் அலுவலர்கள் வேசி மகள்கள் போன்ற வசை சொற் களால் மனரீதியாக பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகி யுள்ளனர். கேட்பதற்கு நாதியற்றவர்களாக இத்துறை அலுவலர்கள் ஊழியர்கள் இன்று உள்ளனர்.

இதுகுறித்து பேச வேண்டிய, துணை இருக்க வேண் டிய ஆளும் அரசு எந்தவொரு எதிர்வினையையும் ஆற்றவில்லை. அதே சமயம் சமூக அரசியல் தளங்களில் செயல்படும் பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக சமூக நீதியையும் மனித உரிமையையும் தங்கள் கொள் கைகளாக அறிவித்துக்கொண்டுள்ள அரசியல் கட்சிகள், சமூக சீர்திருத்த இயக்கங்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக் கான அமைப்புகள், ஆதிக்க எதிர்ப்பு அறிவுஜீவி பிரி வினர் ஆகியோர் - பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன கும்பல் இத்துறையை அழித்து கோயில்களை கைப் பற்றுவதை ஒரு வேலைத்திட்டமாகவே வைத்துக் கொண்டு திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர் என்பதையறியாமல் உள்ளனர்.

தமிழ்நாட்டிலுள்ள இந்து கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இருப்பது என்பது தமிழர்களின் உரிமையை நிலைநாட்டுவதாகும். மேலும் சாதிபேதம், பால் பேதம் ஏதுமின்றி பார்ப்பனர் உட்பட இந்துவாக உள்ள எவரும் உரிய தமிழ்நாடு தேர்வாணைய தேர்வுகள் மூலம் தேர்வாகி கோயில் நிர்வாகிகளாக ஆகமுடியும் என்ற சூழ்நிலை அறநிலையத் துறை நீடித்தால் மட்டுமே பாதுகாக்கப்படும். அந்த வகையில் சமத்துவமும் சமநீதியும் சமூக நீதியும் பாதுகாக்கப்படும்.

இன்று கோயில்களின் வருவாய் அந்தந்த கோயில் களின் வங்கிக்கணக்குகள் வழி உரிய சட்ட விதிகளின்படி செலவு செய்யப்படுகின்றன. வருவாய் அதிகம் உள்ள கோயில்களில் செலவு என்பதில் பெரும் தொகை புதிய முதலீடாக ஆண்டுதோறும் செய்யப்படுகிறது.

இந்து சமய அறநிலையத்துறை சட்டம் இந்த வரு வாய் மற்றும் செலவுகளை கண்காணிப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் கொண்டுள்ளது. இந்த வருவாய் மற்றும் செலவுகள் தணிக்கைக்கு உட்பட்ட வையாகும். இந்த நிலையில் அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் புதிதாக கொண்டு வரப்பட்ட கோயில் களின் வருவாய் குறுகிய காலத்தில் பெருமளவு உயர்ந்து உள்ளது. இதற்கு பலகோயில்களை உதாரணம் காட்ட முடியும்.

ஆனாலும் வருவாய் இல்லாத கோயில்களின் நலனையும் கருத்தில் கொண்டு ஒருகால பூஜைத் திட்டம் போன்ற திட்டங்கள் துறையால் செயல்படுத்தப்படு கின் றன. குக்கிராமங்களில் உள்ள எளிய மக்கள் பிரிவின ரிடையே உள்ள கோயில்களுக்கான கிராமப்புற கோயில் கள் பணித் திட்டம், ஆதி திராவிடர் பகுதி கோயில்கள் பணி திட்டம் என பலவகையிலும் இந்துக் கோயில்களை பாதுகாக்கவும் மேம்படுத்தவும் இத்துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இத்திட்டங்கள் அனைத்தும் இதன் அலுவலர்கள், ஊழியர்களின் சிறப்பான செயல் பாடுகளின் மூலமாகவே சாத்தியப்படுகிறது. சமூகத்தில் சரியானவர்களும் தவறானவர்களும் இருப்பதை போல அரசுத் துறையிலும் சரியானவர்களும் தவறானவர்களும் இருக்கவே செய்வர். இது அறநிலையத்துறைக்கும் பொருந்தும்.

அவர்களை சட்ட வரம்புக்குள் செயல்பட வைக்கவே சட்ட திட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்து கோயில்களின் சொத்துக்கள் பொதுச் சொத்தாக (Public domain Property)
இருப்பதன் காரணமாக அது பல்வேறு அரசுத் துறைகளின் பாதுகாப்பைப் பெற்றுள் ளது. அவை அவ்வப்போது ஆக்கிரமிப்புக்கு உள்ளா னாலும் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கவும் சட்டரீதியான வழிவகைகள் உள்ளன.

கோயில்களின் வருவாய் இன்று கோயிலுக்கு வெளி யில் உள்ள யாதொரு தனிநபரின் அல்லது அமைப்பின் நலனுக்காகவும் பயன்பட அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் தமிழ்நாட்டில் இந்துக் கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் அதற்கான தனியான சட்டத் தின்படி நிர்வகிக்கப்படுவதே ஆகும். வடமாநிலங்களில் மந்திர் எனப்படும் இந்துக் கோயில்கள் அரசுக் கட்டுப் பாட்டில் இருப்பதில்லை. அவை பெரும்பாலும் தனிப் பட்ட அமைப்புகளிடமும், சாதுக்கள் எனக்கூறிக் கொள் பவர்களிடமும் உள்ளன. இந்தத் தனிப்பட்ட அமைப்பு கள், சன்னியாசிகள், சாதுக்கள் போன்றோர் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளுக்குக் கோயில் வருவாயிலிருந்து நிதிகளை அள்ளி வழங்கும் புரவலர்களாக இருக்கின்றனர். கோயில்கள் என்பவை பக்தியை அல்லாமல் மத வெறியை ஊட்டி வளர்க்கும் நிறுவனங்களாக வடமாநிலங்களில் செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. இன்று தமிழ்நாடு பெரிதும் மதக்கலவரங்கள் இல்லாத அனைத்து மதத்தினரும் சகோதரத்துவத்துடன் வாழும் மாநிலமாக உள்ளது.

இதற்கான முக்கியக் காரணங்களில் இந்துக் கோயில் கள் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றத்தால் இயற்றப் பட்ட ஒரு தனிச்சிறப்பான சட்டத்தின் வழி ஒரு அரசுத் துறையால் நிர்வகிக்கப்படுவதும் ஒன்றாகும். ஏனெனில் இந்துக் கோயில்களின் வருவாய் அந்தந்த  கோயில்களின் வளர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகின்றன.

சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளுக்கு நிதியளிக்கும் நிலையங்களாக இங்கு கோயில்கள் இல்லை. இந்து சமய கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறையை வெளியேறுமாறு இடப்படும் கூச்சலின் பின்னால் சில சதித் திட்டங்கள் உள்ளன. மக்கள் மத்தியில் நம்பிக்கையைப் பெற்று ஜனநாயக முறையில் வாக்குகளைப் பெற்று எக்காலத்திலும் தாம் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது என்பதை நன்கு அறிந்து வைத்துள்ள பி.ஜேபி., ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பன கும்பல் கோயில்களைப் கைப்பற்றி அவற்றைத் தங்கள் ஆதிக்கத்திற்கு கொண்டுவந்து வெறுப்பு அரசியலின் பிரச்சாரக் கேந்திரமாக மாற்றுவதற்கான சதித் திட்டமும் கோயில்களின் நிதியை காவி அரசியலின் வளர்ச்சி நிதியாக பயன்படுத்திக்கொள்ளும் சதித் திட்டமும் இந்தக் கூச்சலின்பின் உள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போதுள்ள அரசியல் சூழலில் இயன்ற திசைகளில் எல்லாம் தமிழ்நாட்டில் வேர்கொண்டுள்ள சமூக நீதி அடிப்படையிலான அரசியலையும் சமத்துவத்தைப் பேணும் அற்புதமான பண்பாட்டுச் சூழலையும் அடித்து நொறுக்கி, அழிவு வேலையை செய்யத்துடிக்கிறது ஆதிக்கக்கும்பல். அந்த அழிவு வேலையின் ஒரு முக்கிய அம்சம்தான் இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் மீதும் அறநிலையத்துறை மீதும் திட்ட மிட்டு தொடுக்கப்படும் அவதூறுகளும் தாக்குதல்களும் ஆகும்.

இன்று உலகம் முழுவதுமே பிற்போக்கு சக்திகளுக்கு சாதகமான ஒரு சூழ்நிலை உள்ளது. இந்தியாவிலும் அதே நிலைதான் உள்ளது. இந்தியாவில் மதவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து சமூக நீதிக்கும், மாநில உரிமைகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டு வருகிறது. பொய்களை திட்டமிடுவது, பொய்களை கட்டியமைப்பது, பொய்களை பரப்புவது, பொய்களை அதிகாரத்தில் அமர்த்துவது என பார்ப்பன, பனியா, பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். கும்பல் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதற்காக பெரும்பான்மையான தொலைகாட்சி மற்றும் அச்சு ஊடகங்களை தங்கள் கைப்பாவைகளாக ஆக்கி வைத்திருக்கின்றனர்.

தமிழ்நாட்டுச் சூழலும் இதற்கு விதிவிலக்கில்லை. இந்து சமய அறநிலையத்துறையை குறித்த மீடியாக்களின் செய்திகள் செய்திகளாக அல்லாமல் மிகைப்படுத்தப்பட்ட அவதூறுகளாகவும், தனிப்பட்ட அலுவலர்கள் மீதான தாக்குதல்களாகவும் உள்ளன. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் மூலமாக பொய்ப் பிரச்சாரங்களை செய்து கோயில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டி லிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கருத்தை மக்கள் மனதில் புகுத்தி ஒரு கட்டத்தில் கருத்துக்கான செயல் வடிவத்தை செய்து முடித்து சாதித்து விடலாம் என்பது அவர்களின் எண்ணம்.

ஆனால் தமிழ்நாட்டு மக்கள் பக்தியையும் மதவெறி யையும் பிரித்துப் பார்க்கும் தெளிவான சிந்தனையுடை யவர்கள். அவர்கள் இந்த காவிக் கும்பலின் சதித் திட் டங்களை முறியடிப்பார்கள். அறநிலையத்துறையையும் மக்களே பாதுகாப்பார்கள்.

- நாளை தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner