எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! - 6

களப்போருக்கு காத்திருக்கும் தளகர்த்தர்களின் சூளுரை!

மேலும் ஒரு திராவிட - ஆரியர் போர்!

ஒத்த கருத்துள்ளோர் ஒன்றிணைந்து போராட அழைப்பு!

[இந்து அறநிலையத் துறையை, நீக்கிவிட்டு, ஆரிய பார்ப்பனர்கள் கோயில்களைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்வதை முறியடிக்க தமிழர்கள் ஓரணியில் தீவிரமாய் போராட வேண்டும் என்று சூளுரைத்து களம் காண காத்திருப்பவர்கள் பலர். அவர்களில் திரு.ஆழி.செந்தில்நாதன், திரு.டி.எஸ்.கிருஷ்ணவேல் ஆகியோரின் எழுச்சிக் கருத்துகள் இங்கு இடம் பெற்றுள்ளன.         - ஆசிரியர், ‘விடுதலை’]

 

ஊடக நண்பர்களே!

உணர்வுள்ள தமிழர்களே!

- ஆழி.செந்தில்நாதன் -

இந்து அறநிலையைத் துறை பற்றிய செய்திகளை கவனத்துடன் வாசிப்பீர்.. அன்புக்குரிய நண்பர்களே, குறிப்பாக ஊடகத்துறை நண்பர்களே...

உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள். இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். தமிழ்நாட்டில் மற்றுமொரு போர்முனையைத் தொடங்கியிருக் கின்றன இந்துத்துவ சக்திகள். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களையும் அதன் சொத்துகளையும் தங்கள் கைகளில் கொண்டுவருவதற்காக முழுமூச்சோடு களம் இறங்கியிருக்கிறார்கள். இது அவர்களுடைய நீண்ட கால திட்டம்.

இந்து சமய அறநிலையத்துறையின் மீது தொடர்ச்சியாக பழிகளைப் போட்டு, கோயிலிலிருந்து அரசை வெளியேற்றவேண்டும் என்கிற உத்தியை நீண்டகாலமாக கைகொண்டு இந்த நிலைக்கு அவர்கள் உயர்ந்திருக்கிறார்கள். மதுரைத் தீயிலிருந்து அதைத் தொடங்கியிருக்கிறார்கள்.

நீதிக்கட்சி அரசின் காலத்திலிருந்து தமிழ்நாட்டி லுள்ள கோயில்களுக்கான பொறுப்பிலிருந்துவரும் இந்த நடைமுறை நெடுங்காலமாக தமிழ்நாட்டில் உள்ள கோயில் நிர்வாக முறையின் தொடர்ச்சியே ஆகும். கோயில்கள் முன்பு மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்தன. இப்போது மக்களாட்சியின் கண்காணிப்பில் இருக்கின்றன. கோயில்கள் முன்பு ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாட்டில் இருந்தன. இன்று அனைத்துச் சாதியினருக்கும்பொதுவான அரசின் கண்காணிப்பில் இருக்கின்றன.

ஒட்டுமொத்த கோயில்களையும் அதன் சொத்து களையும் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளத் துடிக்கும் பார்ப்பன சக்திகள் இப்போது இந்து சமய அறநிலையத்துறை மீதும் தமிழ்நாட்டு அரசின் மீதும் கடுமையான யுத்தத்தை தொடங்கியுள்ளன. தொடக்கத்தைத்தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். முழுமையை இனி பார்ப்பீர்கள்.

நமது முட்டாள் மகாராஜாக்கள் செய்த பெரிய தவறுகளுக்கான தண்டனையை நாம் அனுபவிக்கி றோம். கோயில்களும் அவற்றின் சொத்துக்களும் நம்முடையவை. அங்கே மந்திரம் சொல்லவும் மணியடிக்கவுமே பார்ப்பனர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். பிறகு அந்த நிலைமையை மாற்றி அனைத்து சாதியினருமே அப்பணியைச் செய்ய நாம் முயற்சிசெய்கிறோம். புரோகித சக்திகள் அதை எதிர்த்துவருகின்றன. பெருந்தன்மையின் காரணமாகவும் அடிமைத்தனத்தின் காரணமாகவே தமிழ்நாட்டின் கோயில்களில் புரோகிதர்களின் அழிச்சாட்டியங்கள் மக்களால் தீவிரமாக விமர்சிக் கப்படுவதில்லை. இப்போது இந்துக்களிடம் கோயிலை ஒப்படையுங்கள் என்று கிளம்பியுள்ள இந்தக் கூட்டத்தின் உள்நோக்கத்தை நாம் அறிந்து கொண்டு செயல்படவேண்டும். குறிப்பாக, இந்து சமய அறநிலையத்துறை தொடர்பாக வெளிவருகிற செய்திகள் குறித்து நாம் கவனமாக இருக்கவேண்டும். அந்த துறையில் பிரச்சினைகளே இல்லை, ஊழல்களே இல்லை என்று கூறமுடியாது.  அவற்றை இனம்கண்டு நாம் சரிசெய்யவேண்டும். அதைச் செய்வோம். எப்படி கல்வித்துறையில் நடைபெறும் கோளாறுகளை காரணம் காட்டி, கல்வித்துறையை மாநிலத்திடமிருந்து பறிக்க திட்டமிடுகிறார்களோ. அதைப் போலவே இந்து அறநிலையத்துறையில் உள்ள சிக்கல்களை பூதாகரமாகக் காட்டி, கோயில் களை நம்மிடமிருந்து திருடப்பார்க்கிறது காவிக் கூட்டம்.  இதைப் புரிந்துகொள்ளாமல் சில ‘மட’த் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் இந்து அற நிலையத்துறையை விளாசித்தள்ளுகிறார்கள்.  இந் துக்களிடம் கோயிலை ஒப்படை என்கிறார்கள், இவ் வளவு நாட்களாக வேறு யாரிடம் கோயில் இருக் கிறது? இந்து அறநிலையத்துறையும் உள்ளூர் சமூ கமும் சேர்ந்துதான் கோயிலை நிர்வகிக்கின்றன. அதில் இருப்பவர்கள் நூற்றுக்கு நூறும் இந்துக்கள் தான்.   மொத்த கோயில்களையும் சொத்துகளையும் வருமானத்தையும் தமது கையில் எடுத்துக்கொள்ள விரும்புகிற பார்ப்பனக்கூட்டம் இந்து என்று சுட்டுவது யாரை?

காவிக் கூட்டம் தமிழ்நாட்டை அழிவுப்பாதைக் குக் கொண்டு செல்கிறது. ஆட்டத்தைத் தொடங்கிய வர்கள் அதன் ஆழம் தெரிந்துதான் தொடங்கியிருக் கிறார்களா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக் கோயில்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் அல்ல. அவை தமிழ்நாட்டு பொருளாதாரத்தின், அரசியல் அதிகாரத்தின் மய்யங்களாக இருந்தவை. அவை இன்று தமிழகத்தின் அனைத்து மக்களுக்கும் சொந்தமானவை. அந்த கோயில்களை பேணிக்காத்த சமூகங்களுக்கு மட்டுமல்ல, அந்த கோயில்களால் புறக்கணிக்கப்பட்டச் சமூகங்களுக்கும் அவை சேர்த்தே சொந்தமானவை. 20 ஆம் நூற்றாண்டில் நாம் கோயில்களையும் சமய உரிமைகளையும் இந் துக்கள் என்று அழைக்கப்படும் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக ஆக்கியிருக் கிறோம். இது மிகப்பெரிய சாதனையாகும். அவை சமூகத்தின் பொது சொத்து. எனவே அரசின் கண்காணிப்புக் குள்தான் அவை இருக்கமுடியும். இந்த நிலையை மாற்ற பார்ப்பனர்களும் அவர்களது அடிவருடிகளும் ஏதேனும் செய்யமுயன்றால், பழனிச்சாமிகளும் பன்னீர்செல்வங்களும் சும்மா பார்த்துக்கொண்டு நின்றால்...  தேன் கூட்டில் கைவத்துவிட்டு பிறகு குய்யோ முய்யோ என்று கத்தி பிரயோசனம் இருக்காது. தமிழகத்தின் அனைத்து மக்களும் எழுந்து நின்று இந்த பார்ப்பனிய ஆக்ரமிப்பை முறியடிக்கவேண்டும். முதலில் சிதம்பரத்தை மீட்கவேண்டும். தமிழகத்தின் கோயில்களிலிருந்து பார்ப்பனீயத்தின் சுவடுகள் நிரந்தரமாக அழித் தொழிக்கப்படவேண்டும் என்று அவர்கள் விரும் புகிறார்களா என்று தெரியவில்லை. விரும்பினால் அதைச் செய்துமுடிக்கும் நிலையில் தான் இன்றைய தமிழ் இளைய சமூகம் இருக்கிறது.

நெருப்பு புகைந்துகொண்டிருக்கிறது. சாம்பலைப் பார்த்துவிட்டு, எல்லாம் அவிந்துபோய்விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறது காவிக்கூட்டம். மறுபடியும் ஊடக நண்பர்களுக்கும் பிறருக்கும் வேண்டுகோள் - கோயில்கள், இந்து அறநிலையத் துறைகள் தொடர்பான செய்திகளை எச்சரிக்கை யோடு அணுகுங்கள். மிகப்பெரிய உளவியல் போர் தொடங்கப்பட்டிருக்கிறது. ஏமாந்து போகாதீர்கள்.

பகுத்தறிவாளர்கள் கவனத்துக்கு -  இது மதத்துக் குள் நடக்கிற பிரச்சினை அல்ல. கோயில்கள் எக் கேடு கெட்டுப்போனால் என்ன என்று நினைத்து விடாதீர்கள்.

உண்மையில் தமிழர்கள்தான் கோயில்களை மீட்கும் போராட்டத்தை நடத்தி, அவற்றை உண்மை யில் அனைத்து சமூகத்தவர்களுக்கான பொது இடமாக மாற்றவேண்டும். கோயில்களில் தமிழும் தமிழ்ச்சமய நெறிகளும் கோலோச்சும்படி செய்ய வேண்டும். மீண்டும் அனைத்து சனநாயக, முற் போக்கு சக்திகளும் இணைந்து நிற்கவேண்டிய மற்றுமொரு போர்க்களத்தை பார்ப்பனீய சக்திகள் தொடங்கியுள்ளன. நமது ஊடகத்துறை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். ஒவ்வொரு செய்தியிலும் சொல்லிலும் கவனமாக இருக்கவேண்டும்.

- - - - -

இந்து அறநிலையத் துறை

இருக்க வேண்டும்! ஏன்?

- டி.எஸ்.கிருஷ்ணவேல் -

சர்ச்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே என்பது, அரசாங்கம் அவைகளை ஏன் தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கவில்லை என்கிறார்கள் எதிரிகள். சர்ச்சுகளை கட்டுப்படுத்த அவர்களிடம் CSI, Diocese Arch Bishop என்று அவர்களிடம் ஒவ்வொரு பிரிவுக்கு, பல சட்ட திட்டங்களுடன் கூடிய அமைப்புகள் உள்ளன, மசூதிகளையும் இதே போல கட்டுப்படுத்த Waqf Board
பீ  என்ற அமைப்பு, பல சட்ட திட்டங் களுடன் உள்ளது, எந்த சர்ச்சிலும், மசூதியிலும், கலெக்சனை அந்த பாதிரியாரோ, மவுல்வியோ வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது.

தினசரி வசூல் உரிய சாட்சிகளின் முன் சரி பார்க் கப்பட்டு கணக்கில் எழுத்தப்படும் இந்த எல்லா அமைப்புகளும் இந்திய அரசாங்கத்தின் ட்ரஸ்ட்-களின் சட்டவிதிமுறைகளின் கீழே வருகிறது.

எனவே அரசாங்கம் தைரியம் இல்லை என்பதால் சர்சுகளையும், மசூதிகளையும் அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவராமல் இருக்கவில்லை, அங்கே செயல் பாடுகள் விதிமுறைக்கு உட்பட்டு இருப்பதால் மேற் கொண்டு எதுவும் செய்ய தேவையில்லை என்று தான் விட்டுவிட்டது.

மக்கள் வைக்கும் இரண்டாம் குற்றச்சாட்டு, திராவிட இயங்கங்கள் எல்லா இந்து கோயில்களை யும் அரசு கட்டுப்பாட்டில் எடுத்துகொண்டது. இது வும் உண்மையில்லை. இந்து கோயில்கள் மட்டுமே பல நூறு ஆண்டுகளாக எந்த வித கட்டு பாடுகளும் இல்லாமல், கோயில் பூசாரிகளான பார்ப்பனரும், தர்ம கர்த்தாவாக இருக்கும் உயர் சாதி இந்துக்களா லும், அந்த கோயில்களின் சொத்துகளை கணக்கு வழக் கின்றி கொள்ளை அடித்து கொண்டிருந்தது.

1925-ல் முதல் முதலில் ஆங்கிலேயர் காலத்தில், நீதிக்கட்சியின் சார்பாக பனகல் அரசர் சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த போது, ஆங்கி லேய கவர்னரின் மூலம் முதல் முதலில் Hindu Religious Endowments Act 1925 கொண்டு வரப்பட்டது.

அதெல்லாம் தெரியும் இப்போது உள்ள சட் டத்தை கொண்டுவந்தது கருணாநிதி தானே என்று உடனே சொல்ல நினைப்பவர்களுக்கு, சொல்வது, சற்று பொறுங்கள்.

இப்போது உள்ள இந்து அறநிலையத்துறையை கட்டுப்படுத்தும் சட்டம், பெரியாரின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 1959-ல், Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Act XXII of  1959 என்ற சட்டமாக முதலமைச்சர் காமராஜர் ஆட்சியில் தான் கொண்டு வரப்பட்டது.

பிறகு 1991இல் முதலமைச்சர் கருணாநிதியின் காலத்தில், இந்த சட்டத்தில் மேலும் பல மாற்றங்கள் செய்து, பார்ப்பனரின் கோயில் கொள்ளையை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நீங்கள் உங்கள் பகுதியில் பல பால் மற்றும் விவ சாய கூட்டுறவு சொசைட்டிகளை பார்த்திருக்கலாம், அவைகளை அந்த தேர்ந்தெடுத்த தலைவர் மற்றும் செயலாளர் போன்றவர்கள் சரிவர செயல்படுகிறார் களா என்று மேற்பார்வை செய்ய தமிழ் நாட்டு அரசு கூட்டுறவு துறையிலிருந்து சிறப்பு அலுவலர்கள் இருப்பதையும் பார்த்திருப்பீர்கள்.

இந்து அறநிலையத்துறையின் பணியும் அதே தான்,  இந்து கோயில்கள் அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படவில்லை, கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது .

இந்து அறநிலையத்துறையின் வேலை,

1. மிக மிக கூட்டமான கோயில்களில் பூசாரிகள் கன்னாபின்னாவென்று பக்தர்களிடம் பணம் வசூல் செய்து, பின்பக்கமாக உள்ளே அழைத்து செல்வதை தடுப்பது,

2. முறையாக டிக்கட் மூலம், சிறப்பு தரிசனம் போன்ற ஏற்பாடுகள் செய்வது,

3. கோயில் உண்டியல், முதல் இந்த சிறப்பு தரிசன டிக்கட்டுகள், கோயிலை சுற்றி உள்ள கடைகளின் முறையான வாடகை வசூல், பின் இந்த பணம் கோயில் பெயரில் உள்ள வங்கி கணக்கில் முறையாக செலுத்தப்படுகிறதா என்று கண்காணிப்பது,

4. கோயில் செலவுகள் உண்மையில் சரியாக செய்யப்படுகிறதா, அல்லது கணக்கு புத்தகங்களில் மட்டுமே எழுதப்படுகிறதா என்று கண்காணிப்பது,

5. கோயிலுக்கு நிலங்கள் சொத்துகள் இருந்ததால் அந்த குத்தகை, வாடகை பணங்கள் சரியாக வசூல் செய்யப்பட்டு வங்கியில் செலுத்தப்பட்டதா என்று கண்காணிப்பது,

இவை போன்றவை தான் இத்துறையின் வேலை, சுருக்கமாக சொன்னால் இந்தத் துறை இல்லை யென்றால், ஒரு உதாரணத்துக்கு எடுத்துக்கொண் டோம் என்றால் மயிலாப்பூர் கபாலி கோயில் பூசாரி கள் ஒவ்வொருவரும், இந்நேரம் மாமல்லபுரத்தில் சொந்தமா ஒரு பீச் ரிசார்ட் மற்றும் தலா 3 BMW  கார் வைத்திருப்பார்கள்.

இந்து அறநிலையத்துறையின் வேலை, கோயில் வசூல் பணத்தை கொண்டு வந்து அரசாங்க கஜானா வில் சேர்ப்பது அல்ல.

தமிழ் நாட்டில் பலர் இன்னமும் கோயிலில் வசூ லாகும் கோடிக்கணக்கான பணம் தமிழக அரசுக்கு வந்து விடுகிறது என்று தவறாகத் தான் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.

மாறாக அரசு கஜானாவில் இருந்து மக்கள் வரிப் பணத்தில் தான் அறநிலையத்துறை இயங்கிறது, இத்துறை சார்ந்த அனைத்து ஊழியருக்கும் சம்பளம் அரசு வரிப்பணத்தில் தான் கொடுக்கப்படுகிறது.

கோயில் பணத்திலிருந்து பூசாரிகளுக்கு தான் சம்பளம் கொடுக்கப்படுகிறது, இந்து அறநிலையத் துறை சார்ந்த எந்த ஒரு கடைநிலை ஊழியருக்கு கூட கோயில் பணத்தில் சம்பளம் கொடுப்பது இல்லை.

இப்போது உங்களுடன் மேலும் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

1. இந்து அறநிலையத்துறையால் தங்கள் வசதிக்கு திருடமுடியாது கஷ்டப்படும் ஒரே கூட்டம் பார்ப் பனர் மட்டுமே.

2. இந்த துறையை கொண்டு வர பெரிதும் போராடியது பெரியாரும் திராவிட இயக்கமும்.

3. எம்ஜியார் மயக்கத்தில் இருக்கும் மக்களிடம் கருணாநிதி மீது எந்த பழி சொன்னாலும் ஏற்று கொள்வார்கள்.

4. கருணாநிதி நாத்திகவாதி அதனால் அவர் இந்து கோயிலுக்கு எதிராக செயல் பட்டார் என்று சொன்னால் மக்கள் நம்புவார்கள்.

5. தமிழில் வெளிவரும் அனைத்து நாளிதழ்க ளிலும் வேலை செய்வோர் 98% பார்ப்பனர் மட்டுமே (உனக்கு எப்படி தெரியும் என்றால் பத்து ஆண்டுகள் நானே மீடியாவில் பணிபுரிந்துள்ளேன்)

6. நாம் பெரும்பாலும் பத்திரிகைகளை வைத்து தான் செய்தி அறிகிறோம். அதில் சொல்வதை பொதுமக்கள் எப்படியும் ஏற்றுகொள்வார்கள்.

8. தைரியம் இருந்தால் சர்ச்சுகளையும், மசூதிகளை யும் அரசு கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டியது தானே, என்று மதவாத சிந்தனையை தூண்டுவது.

மிகப்பெரிய பார்ப்பனப் புரட்டு

பார்ப்பனர்கள் கோயில் சொத்தைக் கொள்ளை யடிப்பதைத் தடுக்க வந்தது இந்து அறநிலையத் துறை என்பதை மறைத்து, கோயில் வருவாயெல்லாம் இந்து அறநிலையத் துறை வழியாக அரசுக்கு வரு கிறது என்று மக்களிடம் தப்பான கருத்தைப் பரப் பியது முக்கியமான பார்ப்பனப் புரட்டாகும்.


- நாளை தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner