எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்?

ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்!

உயர்நீதிமன்றங்கள் மாநில மொழியில் தீர்ப்பு வழங்க வேண்டும்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

கேரள உயர் நீதிமன்றத்தின் வைரவிழாக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா கொச்சியில் 28.10.2017 நடைபெற்றது. இதில் பங்கேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

நீதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் என்பது நம் நாட்டில் மிகப்பெரிய கவலை தரும் விஷயமாக உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது நமது சமூகத்தில் உள்ள ஏழைகளும், வசதியற்றவர்களும்தான். வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கான வழிவகைகளை நாம் கண்டறிய வேண்டும்.

வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்கக் கோரி வாய்தா கேட்பது நீதிமன்ற நடவடிக்கைகளை இழுத்தடிக்கும் தந்திரமாக அல்லாமல் அவை நெருக்கடியான சூழலில் விதிவிலக்காகப் பயன்படுத் தப்படும் நடைமுறையை உருவாக்குவது குறித்து நாம் பரிசீலிக்க வேண்டும்.

மக்களுக்கு நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், தீர்ப்புகள் மக்களுக்குப் புரியும் மொழியில் அளிக்கப் படுவதும் முக்கியமானதாகும். உயர் நீதிமன்றங்கள் ஆங்கிலத்தில் தீர்ப்புகளை அளிக்கின்றன. நமது தேசம் பல்வேறு மொழிகளைக் கொண்டுள்ள நாடாகும். எனவே மனுதாரர்களுக்கு ஆங்கிலம் பரிச்சயமில்லாத மொழியாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் தீர்ப்புகளின் நல்ல அம்சங்கள் அவர் களைச் சென்றடையாமல் போகலாம். எனவே, மனு தாரர்கள் தீர்ப்பை மொழிபெயர்த்து அறிவதற்காக தங்கள் வழக்குரைஞர்கள் அல்லது மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கும். அதனால் நேர விரயமும், செலவும் ஆகலாம்.

உயர் நீதிமன்றங்கள் உள்ளூர் அல்லது பிராந்திய மொழிகளில் தீர்ப்புகளின் மொழிபெயர்க்கப்பட்ட நகல்களை மக்களுக்கு கிடைக்கச் செய்வதற்கு ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். தீர்ப்பளிக்கப் பட்ட பின்பு 24 அல்லது 36 மணிநேரத்தில் அதன் மொழிபெயர்க்கப்பட்ட நகல் கிடைக்கும் வகையில் அது அமைந்திருக்க வேண்டும். கேரள உயர் நீதிமன்றத்தில் அது மலையாள மொழியிலும், பாட்னா உயர் நீதிமன்றத்தில் அது ஹிந்தி மொழி யிலும் இருக்கும்.

நீதித்துறையும், நீதி பரிபாலன அமைப்பும் தொழில்நுட்பத்தையும், சமூகத்தில் ஏற்படும் மாற்றங் களையும் பயன்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்றார் ராம்நாத் கோவிந்த்.

(தரவு: 'தினமணி', 29.10.2017)

 

====================

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை உடனடியாக,

வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும்!

சென்னை உயர்நீதிமன் றத்தில் தமிழை உடனடியாக வழக்காடு மொழியாக அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன் னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, டில்லியில் செய்தி யாளர்களைச் சந்தித்தார்.அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக் காடு மொழியாக அறிவிக்கக் கோரும் தமிழக வழக்கறி ஞர்கள் போராட்டத்தை ஆதரிக்கிறேன்.

உத்தர பிரதேசம், பீகார், ராஜஸ் தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய 4 மாநிலங் களின் உயர்நீதி மன்றங்களில் இந்தி வழக்காடு மொழியாக அனுமதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக வழக் கறிஞர்களின் கோரிக் கையில் தவறு என்ன இருக் கிறது என்று கேள்வி எழுப் பிய அவர், இந்திய அரசியல் சட்டப்பிரிவு 348இன்படி மாநி லத்தின் ஆளுனர், குடியரசு தலைவர் ஒப்புதலுடன் அப் படி அறிவிக்கலாம். அதே போன்று இந்தியாவின் அலு வல் மொழி சட்டப்பிரிவு 7இன் கீழ் உயர்நீதி மன்றத்தில் தீர்ப்புகளும்; வழங்கலாம் என்று வரையறுக்கப்பட்டு உள்ளது.

மேலே குறிப்பிட்ட 4 மாநிலங்களில் அவர்களின் மொழி அனுமதிக்கப்படும் போது, தமிழ்நாட்டில் ஏன் தமிழை பயன்படுத்த அனு மதிக்கக் கூடாது? அதனை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித் தார்.

மேலும், இதுபற்றி பேசுவ தற்காக விரைவில் சென்னை சென்று தமிழக முதலமைச் சரையும், சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியை யும் சந்திக்க இருக்கிறேன் என்று தெரிவித்தார்.

========================

மாநில மொழிகளிலே சட்ட நடவடிக்கைகள் நடைபெறவேண்டும்

உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி திரு.மு.மு. இஸ்மாயில் அவர் கள் 1980 வெளிவந்த முதல் தீர்ப்பு திரட்டு என்ற புத்தகத் திற்கு எழுதிய முன்னுரை யில் "இந்திய சுதந்திர இயக் கம் அந்நிய அரசியல் ஆதிக் கத்தை விலக்குவதென்ற எதிர்மறையான நோக் கத்தை மாத்திரம் கொண்ட தன்று. அப்படி அந்நிய அர சியல் ஆதிக்கத்தை விலக்கு வதன் மூலம் இந்திய நாட்டி னுடைய அரசியல், பொரு ளாதார, கலாச்சார,சமுதாய வளர்ச்சி முழுமையடைய வேண்டும் என்பதும் அதன் உடன்பாடான நோக்கமா கும்...

அந்திய அரசியல் ஆதிக் கத்தின் - காரணமாக ஆங் கில மொழி உச்சநிலையை வகித்ததனால் இந்த நாட்டு மொழிகள் தங்களுடைய உரிய இடத்தை பெறாத தோடு உரிய வளர்ச்சியையும் அடைய முடியவில்லை... ஒரு மொழியை தாய் மொழி யாக கொண்டவர்களும், அந்த மொழியையே தங்கள் வாழ்க்கையில் பேசிவருப வர்களும் தங்கள் சம்பந்தப் பட்ட எல்லா நடவடிக்கை களும் அம்மொழியிலேயே நடைபெற வேண்டும் என் றும் விரும்புவது தவறில்லை. எனவே அவர்கள் சம்பந்தப் பட்ட சட்ட நடவடிக்கைகள் தமிழிலேயே நடைபெறுமே யானால் அவற்றை முழுமை யாகப் புரிந்து கொண்டு தங் கள் உரிமைகள் பாதிக்கப் படும்பட்சத்தில் அவற்றை திரும்பப் பெறுவதற்காகவும் நிலைநாட்டவும் எடுக்கப் படும் சட்ட நடவடிக்கைகள் எப்படி நடைபெறுகிறது. என்பதை தாங்கள் நேரி லேயே தெரிந்து கொள்வ தற்கு ஒரு வாய்ப்பாக இருக் கும் என்று கருதினார்கள்" என்று கூறியுள்ளார்.

========================

உயர்நீதிமன்ற வழக்காடு மொழி தமிழ்

அநீதி இழைக்கும் மத்திய மாநில அரசுகள்!

இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியா விடுதலையடைந்தபொழுதே மக்கள் மொழிகளில் நீதிமன்றங்கள் இயங்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை. பொய்யான பெரும்பான்மையைக் காட்டி இந்தியைத் திணித்து வரும் மத்திய அரசு நீதிமன்றங்களிலும் இந்தியைக் கொண்டு வரச் சதி செய்து  வருகிறது. 2006 இல் தமிழ்நாட்டுச் சட்ட மன்றத்தில்  உயர்நீதிமன்ற மொழியாகத் தமிழைப் பயன்படுத்த தீர்மானம் இயற்றி மத்திய அரசிற்கு அனுப்பியது. அதனை மத்திய அரசு ஏற்றிருக்க வேண்டும். அதை ஏற்கிறதா அல்லது மறுக்கிறதா என்பது வேறு செய்தி. ஆனால்,  நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கக்கூடாது என்று சொல்லும் மத்திய அரசு அதனை மறுக்க 12 ஆண்டுகளை எடுத்துக்கொண்டுள்ள கொடுமை நேர்ந்துள்ளது.

தமிழுக்கான வழக்காடு மொழித் தகுதியை மறுத்த மத்திய அரசைக் குற்றம் சுமத்தாமல் மாநில அரசையும் குறைகூறுவது ஏன் என்று சிலர் எண்ணலாம். தங்கள்  பதவிச் செல்வாக்குகளையும் பணச் செல்வாக்குகளையும் மத்திய ஆட்சிமூலம் பெற்றுத் திளைக்கும் மாநிலக்கட்சிகள் பெயரளவு தீர்மானங்கள் அல்லது வேண்டுகோள்கள் மூலம் தத்தம் கடமைகள் முடிந்தனவாக எண்ணுவதே தவறுதானே!

1997, 1999 ஆகிய ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் மறுத்த பின்னர், திமுக ஆட்சியில் தமிழகச் சட்டமன்றத்தில் உயர்நீதி மன்றத்தில தமிழை வழக் காடுமொழியாக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தமிழை வழக்காடுமொழியாக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11.10.2012 இல் மறுத்துள்ளதாக மத்திய அரசு தெரி விக்கிறது. அதற்குப் பின்னர்தான் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் ஆளுநர் உரை, மடல் என வேண்டுகோள்கள் விடப்பட்டன. ஆனால், அத்து டன் கடமை முடிந்ததாக அதிமுக அரசு எண்ணிய தால்தான்  மத்திய அரசு எதிராக முடிவெடுக்கிறது. மத்தியில் பேராயக்கட்சியாகிய காங்., பாசக என எக்கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழர்கள்  இந்தி யர்கள் அல்லர் என்ற நல்லெண்ணம் எப்பொழுதும் உண்டு. மீனவர் நலனாக இருந்தாலும்  கச்சத்தீவு உரிமையாக இருந்தாலும் ஆற்றுநீர்ப் பங்கீடாக இருந்தாலும் மக்கள் நலனுக்கு எதிரான திட்டங் களைச் செயலாற்றுவதாக இருந்தாலும் இவை தமி ழர்க்கு எதிரான பாதையில்தான் செல்லும். ஆனால், தமிழ், தமிழர் என்றுசொல்லி வாக்குகள் கேட்கும் தமிழகக் கட்சிகள் இவ்வாறு நடக்கலாமா? மத்திய ஆட்சியில் பங்கேற்றுள்ள இக்கட்சிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தித் தங்கள் நலனை மேம் படுத்திக் கொண்ட இக்கட்சிகள், தமிழக மக்களுக் கான நலன்கள் என்றால் தோல்வியுறுவது ஏன்? தமிழக நலனில் போதிய முனைப்பு காட்டாததுதானே!

ஆகவே, அதிகாரப் பொறுப்பில் இருந்த, இருக் கும் மத்தியக் கட்சிகளுக்கு இணையாக மாநிலக் கட்சிகளையும் குற்றம் கூறுவது சரிதானே!

பொறுப்பில் உள்ளவர்கள் தமிழைப் புறக்கணிப் பதன் காரணம், தமிழில் வாதாடினால், கட்சி வழக் குரைஞர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்ற அச்சம்தானே! வழக்குகள் விரை வில் முடியவும்  நேர்மையாக உசாவல் நடைபெறவும் உரிய கருத்தை வெளிப்படுத்தவும் நல்ல தீர்ப்பைப் பெறவும் தமிழ்நாட்டு உயர்நீதி மன்றத்தில் மட்டு மல்லாமல், உச்சநீதிமன்றத்திற்குச் செல்லும்  மேல் முறையீட்டு வழக்குகளிலும் தமிழே பயன்படுத் தப்பட வேண்டும்.

இந்திய மக்களில் ஒரு பகுதியினர் தம் தாய் மொழியான இந்தியில் வழக்காட உரிமை பெற்றி ருக்கும்பொழுது அதே உரிமை பிறருக்கு மறுக்கப் படுவது எங்ஙனம் நீதியாகும்? இந்தியா ஒரு நாடு எனில்  நாட்டு மக்கள் அனைவருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் அல்லவா? அப்படியில்லா மல் நம் மொழியில் வழக்காடும் உரிமை கூட நமக்கு இல்லையெனில், அதற்கு உதவாத கட்சிகள் இருந் தென்ன? மறைந்தென்ன? கட்சித்தலைவர்களே! இனியேனும் தமிழக நலன் காக்கச் செயல்படுங்கள்! மத்திய ஆட்சிக்கு ஏதேனும் வகையில் நெருக்கடி கொடுத்தேனும் நீதிமன்றத்தில் தமிழுக்குரிய நீதியை நிலைநாட்டுங்கள்!

தமிழ்நாட்டிலுள்ள பாசகவினரே! தமிழர் நலனில் நீங்கள் ஈடுபாடுகாட்டுவது உண்மையெனில், கட்சி யின் முடிவிற்குக் கட்டுப்படாமல், தமிழர் நலனுக்கு உங்கள் கட்சியைக் கட்டுப்படச்செய்யுங்கள்!

ஆளுநருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உயர்நீதிமன்ற வழக்காடுமன்ற மொழியாகத் தமிழை ஏற்கச் செய்யும் உரிமை இருக்கும்பொழுது உச்சநீதி மன்ற நீதிபதிகள் கருத்தைப் புறக்கணியுங்கள். உயர் நீதிமன்ற மொழியாகத் தமிழை அறிவித்து அதனைச் செயல்படுத்துவதற்குரிய வழிவகைகளுக்கான கருத் துகளை மட்டும்  உச்ச மன்ற நீதிபதிகளிடம் கேளுங் கள். நடைமுறைப்படுத்துவதற்குரிய அறிவுரைக ளைக் கூறுவதுதான் உச்சமன்ற நீதிபதிகள் கடமை. மாறாகத் தமிழர் உரிமையை மறுக்கும் உரிமை அவர்களுக்குக் கிஞ்சித்தும் இல்லை என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்.

பாசக அரசினரே! இந்தியா வலிமையான ஒரே நாடாகத் திகழ வேண்டுமானால், மொழித்திணிப்பை நிறுத்தி விடுங்கள்! மொழிவழித் தேசிய நலன்களைப் பேணுங்கள்! தலையாய மொழியான தமிழுக்குரிய இடத்தைத் தவறாமல் அளியுங்கள்! தமிழை மத்திய ஆட்சிமொழியாக அறிவியுங்கள்! தமிழக உயர்நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் தமிழை நீதி மன்ற மொழியாக அறிவியுங்கள்! தமிழில் சட்ட நூல் கள், சட்டச் சொற்கள், பயிற்சிகள் முதலானவற்றிற்குத் தாராளமான பொருளுதவி அளியுங்கள்! தமிழில் நீதிமன்றச் செயற்பாடுகளை இலங்கச்செய்து தமி ழன்னைக்கு நீதி வழங்குங்கள்!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner